உள்நாடு | சமூக வாழ்வு | 2019-08-11 12:31:54

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மிகவும் சமாதானமான சூழ்நிலையில் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றார்கள்- கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் இன்று முஸ்லிம் மக்கள் மிகவும் சமாதானமான சூழ்நிலையில் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றார்கள். என கிழக்கு மாகாண ஆளுநர்  சான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்

வருடாந்தம் முஸ்லிம் சமயத்தினர் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்வதை ஹஜ் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு புனித யாத்திரையை வசதிபடைத்த, வயது வந்த சுகதேகியான முஸ்லிம் ஒவ்வொருவரும் தனது நாளில் ஒரு தடவையேனும் மேற்கொள்ள வேண்டியது சமய விதிப்படி கட்டாயாமாக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தப்புனித யாத்திரையை மேற்கொள்ளக்கூடிய பணவசதி அவர்களிடம் இருத்தல் மட்டுமல்ல அக்கால எல்லைக்குள் அவருடைய குடும்பத்தினரின் பராமரிப்பிற்கு அவசியமான பொருளாதாரத்ததையும் அவர் உடையவராக இருத்தல் வேண்டும்.

இஸ்லாம் மதத்தின் முக்கியமான ஐந்து விடயங்களில் இது ஒன்றாகும். ஹஜ் புனித நாட்களில் மக்காவில் கூடும் மக்கள் தொகையே உலகில் ஆகக்கூடுதலாக மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வாக கருதப்படுகின்றது.

முஸ்லிம் மக்களுடைய ஒற்றுமையை ஹஜ் பிரதிபலிக்கின்றது. அது இறைவன் (அல்லாஹ்) இற்கு அவர்களுடைய அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது. ஹஜ் என்பது ஒருவருடைய மனத்தில் எழும் ”யாத்திரைக்கான எண்ணத்தை” அதாவது வெளிப்படையாக கைக்கொள்ளப்படும் பிரயாணத்தையும் உள் மனதில் எழக்கூடிய செயற்பாடுகளையும் குறிக்கும்.

இப்புனித யாத்திரையானது இஸ்லாமிய நாட்காட்டியின்படி வரும் கடைசி மாதமாகிய ”துல்ஹஜ்ஜா” வில் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை மேற்கொள்ளப்படும்.

ஹஜ் பெருநாளானது இஸ்லாமிய மதத்தின் சரித்திரத்தில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் மக்களுடைய விசேடமான தினமாகக் குறிப்பிப்பட்டுள்ளது. உலகின் கண் பரந்து வாழுகின்ற முஸ்லிம் மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் நடக்கும் சமய வைபவங்களைத் தொடர்ந்து ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றார்கள். வருடாவருடம் கோடிக்கணக்கான முஸ்லிம் மக்கள் உலகின் பல பாகங்களிலிருந்து மக்காவிற்கு சென்று ஹஜ் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

இத்திருநாள் அர்ப்பணிப்புக்கும் தியாகத்திற்கும் உரித்தான ஒன்றாகும். இத்திருநாளில் ஒவ்வொருவரும் தமது உயர் அந்தஸ்த்தையும் தற்பெருமையையும் மறந்து ஒரு சாதாரண பிரஜை போல மிகவும் சாதாரணமான வெண்ணிறத்துணியை அணிந்து இலட்சக் கணக்கில் ஒன்று கூடி தீமைகட்கு எதிராக அணிவகுத்து எல்லோருக்கும் பொதுவாக நன்மையையே கோரி பவனி வருவார்கள்.

கிழக்கு மாகாணத்தில் இன்று முஸ்லிம் மக்கள் மிகவும் சமாதானமான சூழ்நிலையில் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றார்கள்.

முழு நாட்டிலும் பொருளாதார மற்றும் சமூக மட்டத்தில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், சகல சமூகத்தவர்கள் மத்தியிலும் மத ரீதியான ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் நாம் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இவ்வாறான சமய வைபவங்களினாலும் மத ரீதியான  மற்றும் சமூக ஒற்றுமையினாலும் இந்த நாட்டை நாங்கள் அனைவரும் அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.

கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் இந்த நன்னாளில் சகல முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு சமாதானமும் சுபீட்சமும் நிலவட்டும்!!!


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts