பாறுக் ஷிஹான்
Posted By Admin | Posted On 2019-08-05 22:01:33 | Views 985

பாறுக் ஷிஹான்  

எதிர்வரும்   ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது  என்கின்ற விடயம்  தொடர்பாக   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். ரி. ஹசன் அலி மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.

இச்சந்திப்பானது  நிந்தவூர்  மாவடி முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(4)  மாலை 4:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது.

இக்கூட்டத்துக்கு வருகை தந்த பொதுமக்களிடம் கட்சியின்  பிரதான கொள்கை மற்றும் எதிர்கால ஜனாதிபதி தேர்தல் குறித்தும்    ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். ரி. ஹசன் அலி விரிவாக  விளக்கமளித்தார்.

இதன் போது சமகால அரசியல் குறித்து தெளிவுகளைப்பெற்ற  அனைவரும் தத்தமது கருத்துக்களை சபையில் தெரிவித்ததுடன் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அவற்றை தனது குறிப்பு புத்தகத்தில்  எழுத்தில் எழுதி கொண்டதை காண முடிந்தது.

மேலும்  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் எழுத்தாளருமான எம்.ரீ ஹசன் அலி  கட்சி  முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடிய விடயங்களை இறுதியாக ஊடகவியலாளர் சந்திப்பில் விரிவாக விளக்கமளித்தார்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts