வெளிநாடு | பொருளாதாரம் | 2019-01-27 23:55:03

பிரேஸிலில் அணை உடைவு: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

பிரேஸிலிலுள்ள ப்ருமடின்ஹோ (Brumadinho) குளத்தின் அணைக்கட்டு உடைந்ததில், காணாமல்போன சுமார் 300 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அணை உடைந்ததில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 34 ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலெ எனும் பிரேஸிலின் பாரியதொரு சுரங்க அகழ்வு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அணை உடைந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இரும்புத்தாது சுரங்கத்திற்கு அருகிலுள்ள குறித்த அணை உடைந்ததில், இதற்கு கீழுள்ள இன்னொரு அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த அணைக்கட்டில், சுரங்கத்தில் இருந்து வரும் நீரை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

12 மில்லியன் கன மீற்றர் நீரை சேமிக்கும் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து எவ்வளவு கழிவு வெளியேறியுள்ளது என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts