✍️மஜீட். ARM
சம்மாந்துறை RANGERS விளையாட்டு அமைப்பினால் தமது விளையாட்டு அணிக்கான உத்தியோகபூர்வ ஆடை அறிமுக நிகழ்வு (17) இரவு சம்மாந்துறையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

சம்மாந்துறை Red Chilli உணவகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு, விசேட இரவு இராப்போசன விருந்துடன் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கடந்த பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்களான S.M. அஸாறுதீன், R.M. றிபாஸ், A.L.M. நிப்ராஸ், S. றியாஸ் மற்றும் Social TV ஊடகத்தின் பொது முகமையாளர் ARM . மஜீட் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது அணியின் புதிய சீருடை அதிதிகளினால் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களுக்கான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்ன.
சம்மாந்துறை பிரதேசத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இவ்வாறான விளையாட்டு அமைப்புகளின் பங்களிப்பு மிக அவசியமானது என இதன்போது உரையாற்றிய அதிதிகள் சுட்டிக்காட்டினர்.







