✍️எம்.எஸ்.எம்.ஸாகிர்

அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதிக்கு காபட் (Asphalt Laying) இடும் பணி இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
900 மீற்றர் நீளம் கொண்ட இவ்வீதி 14 மில்லியன் செலவில் இடம்பெறுகின்றது.
அத்துடன் இதுவரை காலமும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் வளாகத்தில் மழைநீர் நிரம்பி எங்கும் செல்ல முடியாது கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தடையாக இருந்ததன் விளைவாக அம்மழை நீரை கல்முனை சாஹிராக் கல்லூரியில் இருந்து நீலத்திற்குக் கீழ் கொண்டு சென்று கடலில் சேர்க்கும் தனியான வடிகான் அமைப்புத் திட்டம் (underground stormwater drinage system) 25 மில்லியன் செலவில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுகளில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட வீதி அபிவிருத்தி திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள், பிரஜாசக்தி தவிசாளர்கள், கல்முனை பிரதேச தேசிய மக்கள் சக்தி செயற்பட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





