(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டு ஆண்டின் முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (01.01.2023) பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டதோடு தேசத்திற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்கள் மற்றும் அன்னையில் தித்வா புயல் காரணமாக மரணித்த உறவுகளுக்குமென இங்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து அரசு கொள்கை பிரகடனத்தின் படி சத்தியபிரமாண உரை வாசிக்கப்பட்டது. சகல உத்தியோகத்தர்களும் மொழிந்து சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் விசேட சொற்பொழிவு பிரதேச செயலாளர் ராகுலநாயகி நிகழ்த்தியதோடு கடந்த காலங்களில் ஒவ்வொரு திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்கள் குறித்தும் உத்தியோகத்தர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டது. இதனை அடுத்து இனிப்புப் பண்டங்கள் வழங்கி ஆண்டின் முதலாவது நாள் கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, நிர்வாக உத்தியோகத்தர் ஓ.ஜி. குசுமிண்ட உட்பட சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என சகல அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


