பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-10-07 01:55:21

அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய சர்வதேச சிறுவர் தினம்!

( நூருல் ஹுதா உமர் )

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட காரைதீவுக் கோட்ட கமு/கமு/மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினம் வெகு விமர்சியாக அதிபர் வீ. முஹம்மட் ஸம்ஸம் தலைமையில் கல்லூரியின் முகாமைத்துவக் குழுவினரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளரும், கல்லூரியின் PSI இணைப்பாளருமான அல்ஹாஜ் மெளலவி ஏ.எல்.எம்.ஜஹாங்கீர் (ஹாமி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

மேலும் கல்லூரியின் பிரதியதிபர்கள், உதவியதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

மாணவர்களின் பலதரப்பட்ட கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர் தினத்தினையொட்டியதான பாடலை ஆங்கில பாட ஆசிரியை திருமதி. எஸ்.எஸ். ஆயிஷா அவர்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

இந்நிகழ்வின் போது அனைவருக்கும் ஐஸ்கிரீம், பழம், கேக் மற்றும் நினைவுப் பரிசில்களும் கல்லூரியின் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேச சிறுவர் தின சிறப்புரைகளை அதிபர் வீ.எம்

ஸம்ஸம், பிரதி அதிபர் ஏ. எல். ரஜாப்தீன் , பிரதம அதிதி ஏ. எல்.எம். ஜாகங்கீர் ஆகியோர்களால் நிகழ்த்தப்பட்டதுடன், பிரதி அதிபர் மெளலவி. எம்.சி.எம்.தஸ்தகீர் அவர்களினால் நிகழ்வுகள் யாவும் தொகுத்து வழங்கப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts