பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-10-02 06:52:15

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 19 வது ஆண்டு நிறைவும், ஒன்று கூடலும்!

(எஸ். சினீஸ் கான்)

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 19 வது ஆண்டு நிறைவும், வருடாந்த ஒன்றுகூடலுடன் புதிய நிருவாக சபைத் தெரிவும்  நேற்றிரவு  8.00 மணிக்கு அட்டாளைச்சேனை யாடோ ஹோட்டலில் இடம்பெற்றது.

நுஜா ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக்   கலந்துகொண்டு சிறப்பித்தார். 

கெளரவ அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், இளம் தொழிலதிபர் ஏ.ஆர்.முனாஸ், மக்கள் வங்கி சந்தைப்படுத்தல் முகாமையாளர் எம்.ஐ.நபீல், பாராளுமன்ற உறுப்பினரின் அக்கறைப்பற்று இணைப்பாளர் ஏ.எல்.மர்ஜூன், கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜகுபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஒன்றுகூடலின்போது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பலவிடயங்கள் பற்றியும், ஒன்றியத்தின் எதிர்காலத்திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதன்  பின்னர்  புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.

இங்கு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய ஒருலங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகருமான பன்னூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர் மற்றும் இளம் ஊடகவியலாளரும் தொழிலதிபருமான ஏ.ஆர்.முனாஸ் ஆகியோர் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் சமகால நாட்டு நடப்புகள் குறித்தும், முஸ்லிம் அரசியலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் குறித்தும் நீண்ட உரையொன்றை இங்கு நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட 2023 - 2024 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு

தலைவர் -  எஸ்.எம்.அறூஸ், பிரதித் தலைவர்கள் - எஸ்.எல்.மன்சூர்,  எம்.எச்.முஸ்தாக் முகம்மட்

 செயலாளர்  பைசல் இஸ்மாயில், பிரதிச் செயலாளர்   ஏ.எல்.கியாஸ்தீன், பொருளாளர்  ஜூல்பிகா செரீப், உதவிப் பொருளாளர்  எம்.ஐ.சியாத், தவிசாளர் -  ஏ.எல்.றமீஸ், பிரதித் தவிசாளர்  எம்.ஏ.தாஜஹான், தேசிய அமைப்பாளர்  எம்.ஐ.எம்.றியாஸ், பிரதித் தேசிய அமைப்பாளர் - ஏ.எம்.ரபீக், தேசிய ஒருங்கிணைப்பாளர் – எம்.ஜே.எம்.அஸ்ஹஹர், பிரதித் தேசிய ஒருங்கிணைப்பாளர் - பீ.எம்.றியாத்

நிர்வாக குழு உறுப்பி்னர்கள்

எஸ்.சினிஸ்கான், யு.எல்.சிப்லியா, ஐ.எம்.ஹம்தான்,என்.எம்.பௌசர் ,எம்.எல்.எம்.பாரீஸ், சித்தி சபானா, எஸ்.எல்.அப்ரின், ஏ.ஜீ.றுஸ்வின், எப்.அஸ்பர் சபா, டி.எம்.அறபாத், எம்.சியாம்

போசகராக பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான  சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் தெரிவானதுடன் சிரேஸ்ட ஆலோசகர்களாகஎஸ்.எல்.எம்.அபுபக்கர், ஐ.எல்.எம்.தாஹீர், கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜகுபர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts