பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-10-02 06:29:49

சம்மாந்துறையில் Y2K அமைப்பின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முகமாக  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2000 A/L கற்ற பழையமாணவர்களை ஒன்றிணைத்த "Y2K" அமைப்பு ஏற்பாடு செய்த இரத்த தானமுகாம் சம்மாந்துறை பத்ர் ஜும்மா பள்ளி வாசலில் நேற்று (30) நடைபெற்றது.

"Y2K" அமைப்பினர் ஏற்பாடு செய்த இரத்த தானம் முகாமில்  ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். 

Y2K அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான சட்ட முதுமானி எம்.ஏ.எம் லாபீர் அவர்களின்  ஆலோசனைக்கமைய இவ் அமைப்பின் உறுப்பினர் ஏ.எல் சபீர் அவர்களின் ஏற்பட்டில் இடம் பெற்ற இவ் இரத்த தான முகாமிற்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா வருகை தந்தார்.

இவ் அமைப்பானது ஒவ்வொரு வருடங்களும் இரத்த தான முகாம் நிகழ்வினை ஒழுங்கு படுத்தி மிகச் சிறப்பாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts