பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-09-27 18:57:33

நமது அண்டை வீட்டார்களுக்கும், ஏழை மக்களுக்கும் ஜாதி பேதம் பாராமல் உதவ வேண்டும் - முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மவ்லானா அல்-காதிரி!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பல்சமய, கலாசார நாடான இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப இந்த புனித நாளில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மவ்லானா அல்-காதிரி தெரிவித்தார்.

நாளை உயிரிலும் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னி்ட்டு விடுத்துள்ள மீலாத் தின வாழ்த்துச் செய்தியிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நாளை 2023 செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளான நாளை நம் தாய் நாடான இலங்கையின் வளர்ச்சிக்காக எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிடம் பிரார்த்திப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வருடம் நம் அனைவருக்கும் புனித ரபீஉல் அவ்வல் மாதத்தில் மவ்லிதுர் ரசூல் மஜ்லிஸை 12-நாட்கள் நடாத்தி நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை ஓதி மக்களுக்கு உணவு வழங்கும் பாக்கியமும் கிடைத்தது எல்லாப் புகளும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ் !

நமது அன்பிற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் ஸலாத்தைப் பரப்புங்கள், ஜாதி, மத வேறுபாடின்றி மக்களுக்கு  உணவு வழங்குங்கள், இந்த புனித மாதம் இந்த நல்ல செயல்களைச் செய்ய ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இந்த மிலாதுந் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும், இந்த நன்னாளில் நமது நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருடனும் நாம் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்.

எனவே நாம் நமது அண்டை வீட்டார்களுக்கும் மற்றும் ஏழை மக்களுக்கும் ஜாதி பேதம் பாராமல் உதவ வேண்டும், இந்த புனித நாளில் அவர்களை நன்றாக நடத்துவதும் அவர்களின் சிரமங்களுக்கு உதவுவதும் மிகவும் சிறந்ததாகும்.

பல்சமய, கலாசார நாடான இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப இந்த புனித நாளில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts