உள்நாடு | கல்வி | 2023-09-22 16:18:30

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக்​ கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ. எம்.பதுறுத்தீன் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி அஷ்ரப் அரங்கத்தி​ல் ( 24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணிக்கு பட்டம் பெறவுள்ள ஹாபிழ்கள் மற்றும் மௌலவிகளுக்கான அறிமுக ஊர்வலம் கல்லூரி அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் நூராணியா ஜும்ஆ பள்ளிவாசல் மூன்றலில் ஆரம்பமாகி நிகழ்வு நடைபெறும் அல்-மனார் மத்திய கல்லூரி வரை அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாஜ் அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம்.பைஸால், நஹ்​​ழா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்​-ஷெய்க் ஏ.அபூஉபைதா (​மதனி), தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மொழித் துறை ஓய்வுநிலை பேராசிரியர் அஷ்​-ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலாலுத்தீன, அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்​-ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் சூரி (​மதனி),பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, இறக்காமம் பிரதேச செயலாளரும் அரபுக் கல்லூரியின் பழைய மாணவருமான அல்ஹாபிழ் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல்.எம்.மிஹ்​ழார் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகளாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.ஏ.மனாப், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.றைசுல் ஹாதி, முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்​, ஜெமீல், கல்முனை குவாஸி நீதிமன்ற நீதிபதி எஃப். எம்.ஏ. அமீருல் அன்சார் மௌலானா, அல்-மனார் மத்திய கல்லூரி அதிபர் ஐ.எல் உபைதுல்லாஹ், ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எம்.எம்.ஹிர்ப​கான், பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதி​​காரி ஜே.எஸ்.கே.வீரசிங்க, ​மஸ்ஜிதுல்​ கபீர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் பேராசிரியர் ஐ.எல்.எம்.மா​ஹிர், ​மஸ்ஜிதுன்​ நூர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.முஹர்ரப், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர் பொறியாளர்,இசட். உபைதுல்லாஹ், ஓய்வு நிலை அதிபர் எஸ்.ஏ.எஸ். இஸ்மாயில் மௌலானா உட்பட பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை வானொலி பிரதிப்பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் தொகுத்து வழங்கவுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts