பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-08-13 06:10:37

மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக அறிமுகமும், கௌரவிப்பும்!

நூருல் ஹுதா உமர்

கடந்த வாரம் பொதுமக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் அறிமுகமும், கடந்த கால நிர்வாகத்தில் சிறப்பாக இயங்கிய செயலாளர் அபூபக்கர் அஹமட் றியாஸ் அவர்களுக்கான கௌரவிப்பும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் அந்நூர் ஜும்மா பள்ளிவாசலில் நிர்வாக சபை தலைவர் ஏ. பௌசர் தலைமையில் நடைபெற்றது.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் புதிய நிர்வாக சபையினாராக தெரிவு செய்யப்பட்டவர்களை நிர்வாக சபையின் உப செயலாளர் யூ.எல்.என். ஹுதா பொதுமக்கள் மற்றும் ஜமாத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தவகையில் புதிய நிர்வாக சபை தலைவராக அல்ஹாஜ் ஏ. பௌசர், செயலாளராக எப்.எம். ரஃபி, பொருளாளராக சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், உப தலைவராக அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி உத்தியோகத்தர் ஏ.எம். ஜாஹீர் (ஜே.பி), உப செயலாளராக கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர், சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.என். ஹுதா உமர், கணக்கு பரிசோதகராக மௌலவி  ஏ.எல்.ஏ. சுஜா (ஸஃதி, பின்னூரி) ஆலோசகராக எம்.ஐ. இஸ்திகார் ஆகியோருடன் மேலும் 18 நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நாட்டினது பொருளாதார நெருக்கடி, சுகாதார சிக்கல் மிக்க கொரோனா தொற்றுக்காலத்தில் இந்த இறை இல்லத்தை சிறப்பாக கொண்டுசெல்ல வழங்கிய அர்ப்பணிப்புமிக்க சேவையை நன்றியுடன் நினைவு கூர்ந்து மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகத்தினதும், மாளிகைக்காடு மக்களினதும், அரச அதிகாரிகளினதும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளினதும் பங்குபற்றலுடன் முன்னாள் செயலாளர் அபூபக்கர் அஹமட் றியாஸ் நினைவுச்சின்னங்கள், பரிசில்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டர்.

உலமாக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹான், மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம் உட்பட பிரதேச பொதுமக்கள் எனப்பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts