பிராந்தியம் | அரசியல் | 2023-08-08 05:50:52

பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு பொதுமக்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

(எமது நிருபர்)

பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு மக்களுடன் அப்பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கிராம நிலதாரி பிரிவில் வாக்காளர்களை புதிதாக பதிவு செய்வது தொடர்பிலானதும், மற்றும் அவசர நடவடிக்கைகள் தொடர்பிலானதுமான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் பெரியநீலாவனை கமு/கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எ.எம். றக்கிப், பெரியநீலாவனை கமு/கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய அதிபர் எ.எல். அன்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் சாலி, பள்ளிவாசல் தலைவர், பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர். 

பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு பொதுமக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், நிரந்தரமாக பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவில் வாக்காளார்களாக தம்மை பதிவுசெய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட அக்கிராம நிலதாரி பிரிவில் வாக்காளர்களை புதிதாக பதிவு செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு உறுதியளித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ், அம்பாரை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இவ்விடயம் தொடர்பில் முன்னடுத்துள்ள நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு விளக்கினார். மேலும் பல பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவின் அவசிய விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts