உள்நாடு | அபிவிருத்தி | 2023-07-25 23:28:30

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்!

01.முன்மொழியப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை.

முன்மொழியப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 2023.06.26 தொடக்கம் 2023.06.28 வரை கொழும்பில் நடாத்தப்பட்டுள்ளது. சுங்க ஒத்துழைப்புக்கள் மற்றும் வர்த்தக வசதிப்படுத்தல்கள், பொருளாதார ஒத்துழைப்புக்களைப் போலவே சுகாதார முறைகள் மற்றும் தாவரச் சுகாதார முறைகள் (ளுயnவையசல யனெ phலவழளயnவையசல) போன்ற அத்தியாயங்கள் இக்கலந்துரையாடலில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் பற்றிய செயற்பாட்டுத் திட்டத்திற்கமைவாக 2024 பெப்ரவரி மாதம் குறித்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கும், 2024 மார்ச் மாதமளவில் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதைக் குறிப்பிட்டு, கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள் தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

02.  சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளல்.

வறுமைப்பட்டவர்கள் மற்றும் இடர்களுக்கு ஆளாகியவர்களுக்கு மிகவும் சிறந்த இலக்குடன் கூடிய வருமான ஒத்துழைப்புக்கள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குவதற்கும், சமூகப் பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்துகின்ற கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக 2023.05.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ‘அஸ்வெசும’ புதிய நலன்புரி நன்மைகளைச் செலுத்தும் முறைமைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 185 மில்லியன் அமெரிக்க டொலர்களும், தெரிவு செய்யப்படுகின்ற பயனாளிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கான முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்கு 07 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஒட்டுமொத்த கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்துவதற்காக 08 மில்லியன் அமெரிக்க மொலர்களும், மூன்று (03) பகுதிகளின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இலங்கை புகையிரத திணைக்களத்தை மீள்கட்டமைத்தல்

அரசின் யு தரத்திலான திணைக்களமாகத் தரப்படுத்தப்பட்டுள்ள, பயணிகள் போக்குவரத்து மற்றும் பண்டங்கள் போக்குவரத்து ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குகின்ற இலங்கை புகையிரத திணைக்களத்தின் நிர்வாக ரீதியான, நிதி ரீதியான மற்றும் தொழிற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் பற்றி தற்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகளைக் குறைத்து, சேவை வழங்கல்களை உயரிய மட்டத்தில் பேணிச் செல்வதற்காக இத்திணைக்களம் மீள்கட்டமைக்கப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதுடன், அதற்காக இத்திணைக்களத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களின் உடன்பாடும் கிடைத்துள்ளது. அதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, மிகவும் பொருத்தமான மாதிரியின் கீழ் இத்திணைக்களத்தை மீள்கட்டமைப்பதற்கான பொருத்தமான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக இவ்விடயஞ்சார் நிபுணத்துவர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

04.இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக நிறுவனத்திற்கும் இடையிலான அனுமதிப்பத்திர ஒப்பந்தமொன்று கையொப்பமிடல்

இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு, நல்லுறவு மற்றும் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கில் சீன மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான தொலைக்காட்சி நிகழ்;ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான அனுமதிப்பத்திர ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர ஒப்பந்தத்தில் இருதரப்பினர்களும் கையொப்பமிடுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. விளையாட்டுக்களில் ஒத்துழைப்புக்களுக்காக இலங்கை அரசு மற்றும் அவுஸ்திரேலியா அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் விளையாட்டுக்களில் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் 2020.02.15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் திறமைகளை வெளிக்காட்டுகின்ற விளையாட்டுத் துறைகளை அடையாளங் கண்டு குறித்த துறையிலுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கிடையே தகவல்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளல் மற்றும் பரஸ்பர நன்மைகளின் அடிப்படையில் விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கில், குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு இயலுமாகும் வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்கு இருதரப்பினரும் உடன்பாடுகளை எட்டியுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

உள்;ர் உற்பத்தியாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும், சீமெந்து மற்றும் சீமெந்துசார் உற்பத்திகளின் இறக்குமதிகளிலிருந்து அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சீமெந்து உற்பத்திக்குத் தேவையான இடைநிலைப் பொருட்களான சீமெந்து உருக்கங்கல் (கிளிங்கல்) மற்றும் முழுமையாக தயாரிக்கப்பட்ட சீமெந்து மற்றும் விற்பனையின் போது தற்போது காணப்படும் சீமெந்து இறக்குமதியில் அறவிடப்படும் செஸ் வரியை அதிகரிப்பதற்காக 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2023.06.16 திகதிய 2336ஃ71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts