உள்நாடு | கல்வி | 2023-07-17 13:59:41

அல்-ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.எம்.முகம்மட் நியாஸ் பொறுப்பேற்றார்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.எம்.முகம்மட் நியாஸ் (17) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அல்-ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஓய்வுக்கு செல்லவுள்ள நிலையில், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் எம்.எம்.முகம்மட் நியாஸ் அல்-ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1990 ஆம் ஆண்டு ஆசிரிய சேவையில் இணைந்து கொண்ட எம்.எம். முஹம்மட் நியாஸ் தனது முதல் ஆசிரியர் சேவையை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் ஆரம்பித்தார்.

சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக சேவையாற்றும் போது 2012 ஆம் ஆண்டு அதிபர் சேவை போட்டி பரிட்சையில் சித்தி அடைந்து தனது அதிபர் சேவையை ஆரம்பித்தார். மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் உதவி அதிபராக கடமையாற்றும் போது பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்திற்கு 2016 ஆம் ஆண்டு அதிபராக நியமிக்கப்பட்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக அப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய எம்.எம் முஹம்மட் நியாஸ் கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு பெரும் பங்காளிப்பு செய்த ஒருவராவார்.

அதிபர் கடமையை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில் கல்முனை வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி நஸ்மியா ஸனூஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜிஹானா ஆலிப், புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபர் எம்.சி.ஏ.நஸார், பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் பி.எம்.நஸ்றுத்தீன் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பாடசாலையின் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts