உள்நாடு | கல்வி | 2023-06-30 16:12:25

சர்வதேச தலைவர்களுக்கு யுனிசெப் மாநாட்டில் வைத்து அரைகூவல் விடுத்த சம்மாந்துறை சிறுமி.

நூருல் ஹுதா உமர். 

ஓர் அடர்த்த மரமானது 12 பேர் சுவாசித்து உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. அதனை வெட்டினால் 12 பேரைக் கொலை செய்வதனைப் போலுள்ளதாக உணரவில்லையா ? என்று 12 வயது சிறுமியாகிய நான் உலகத்தாரிடம் கேட்கிறேன் என்றும் 2015 ல் பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இன்று வரையும் கையெழுத்திடாத உலக நாடுகளின் தலைவர்கள் இவ் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இணைந்து கொள்ளுங்கள் என பகிரங்க அழைப்பினை விடுகிறேன் என்று நேற்று (28.06.2023) கொழும்பில் இடம்பெற்ற யுனிசெப் சர்வதேச அமைப்பின் Bussiness Council அங்குராப்பண நிகழ்வில் சிறப்பு உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்ட 12 வயது சிறுமி மின்மினி மின்ஹா சர்வதேச தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய அவர், நான் இச்சபையினோர் முன்னிலையில் ஓர் வேண்டுகோளை சர்வதேசத்துக்கு விடுக்கிறேன். இவ் ஒப்பந்தத்தில் 12. டிசம்பர். 2015 இல் 55 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. பாரிஸ் உடன்படிக்கை 2016 - நவம்பர் -4ம் திகதி அமுலுக்கு வந்தது. அதில் இலங்கை 2016 - ஏப்ரல்- 22 ம் திகதி கைச்சாத்திட்டு விட்டது.

அதாவது உலகளவில் வெப்பம் அதிகரிப்பினை தடுப்பதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 2015 ம் ஆண்டு மேற்க்கொள்ளப்பட்டது. இந்நூற்றாண்டின் முடிவில் வெப்பநிலை அதிகரிப்பை 02 டிக்கிரி செல்சியஸ்ஸால் குறைத்தல் அல்லாது போனால் 1.5 டிக்கிரி செல்சியஸினாலாவது இந்த வெப்பநிலையைக் குறைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது என்றார். 

யுனிசெப்  பிசினஸ் கவுன்சில் மாநாடானது யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி  கிறிஸ்டியன் ஸ்கொக் தலைமையில் இடம்பெற்றது. இங்கு மேற்கண்டவாறு உரை நிகழ்த்திய மின்மினி மின்ஹா, சிரேஷ்ட ஆய்வாளர் ஜலீல் ஜீ அவர்களின் புதல்வியும், சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் தரம் 7ல் கல்வி கற்று வரும் சமூக, சூழலியல் செயற்பாட்டாளருமாவார். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts