பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-06-08 05:59:09

டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமான வீடு வீடான களப்பயணம் : வெற்று காணிகள் பராமரிக்கப்படாத கிணறுகள், வீடுகளுக்கு சிவப்பு அறிக்கை!

(நூருல் ஹுதா உமர் )

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கிராம உத்தியோகத்தர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழு ஒன்று டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமான வீடு வீடான களப்பயணம் ஒன்றை நேற்று (07) மேற்கொண்டு இருந்தனர்.

இந்த களப்பரிசோதனையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பைசால் முஸ்தபா,  எம்.எம்.எம்.சப்னூஸ், டெங்கு கட்டுப்பாட்டு கள பரிசோதகர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் இதன்போது வெற்று காணிகள் பராமரிக்கப்படாத கிணறுகள் வீடுகள் என்பவற்றிற்கு  சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts