பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-06-07 05:56:54

பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை!

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.ரிஸ்பின் அவர்களினால்  தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் கீழ் கடமையாற்றம் மேற்பார்வை பொது சுகாதார மாதுக்கள்(SPHM) பொது சுகாதார மாதுக்கலுக்கான(PHM) ஒருநாள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இப்பயிற்சி பட்டறையில் பெண்கள் வன்முறைக்கு ஆளாகும் விதம் வன்முறைக்கு ஆளாகுவதை கட்டுப்படுத்துதல் இதனால் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் விசேடமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் உளவியல் மாற்றம் அதனை மேற்பார்வை செய்யும் விதம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பிரபல உளவியல் வளவாளரும் கல்முனை பிராந்திய உளநலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான வைத்தியர் எம்.ஜே நௌபல் அவர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை தாய் சேய் நலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு பிரதீப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts