![]() |
மூன்று புதிய ஆளுநர்கள் நாளை காலை பதவி பிரமாணம் செய்ய இருக்கின்றார்கள். ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம் பெற இருக்கின்றது.
கிழக்கு மாகாண சபை, வடக்கு மாகாண சபை, வடமேல் மாகாண சபை – இந்த மூன்று சபைகளுக்குமான ஆளுநர்கள் நேற்று ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இடங்களுக்கே மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட இருக்கின்றார்கள். இன்று பிந்தி கிடைத்த தகவலின் படி, கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர் பதவி பிரமாணம் ஏற்ற கையோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்துக்கு செல்லும் அவர், மறைந்த சமூகமூர்த்தி தொண்டமான் ஆரம்பம் தொண்டமான் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் தெரிவிக்க இருக்கிறார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று, திருகோணமலையில் உள்ள மாகாண சபை அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்பார் என தெரிய வருகிறது.
இதே வேளை, கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான தயாகமகே ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஒரு தகவல் தெரிவித்தது.
இதற்கிடையில், வட மாகாண சபை ஆளுநராக மீண்டும் பி.எஸ். எம்.சார்ல்ஸ் இன்று பதவிப்பிரமாணம் செய்யலாமென கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வடமேல் மாகாண சபையின் ஆளுநராக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார பதவியேற்பார் என ஊர்ஜிதமாகி இருக்கிறது.