விளையாட்டு | விளையாட்டு | 2023-05-16 16:34:05

மருதமுனை பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி; B4U Warriors அணி சம்பியன்

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்)


மருதமுனை பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சுற்றுப்போட்டியின் தவிசாளர் எம்.எம். நுசையிர் தலைமையில் (14.05.2023) மாலை நடைபெற்றது.

இதில் திகாமல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

அணிக்கு 9 பேர் கொண்ட 7 ஓவர் மென்பந்து கிரிக்கெட்  சுற்றுப் போட்டியாக நடைபெற்ற இப் போட்டியில் பத்து அணிகள் பங்கு கொண்டன இந்த எம்.பி.எல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், இறுதிப்போட்டிக்கு மருதமுனை பி.போ.யூ. வோரியர்ஸ் அணியும் (B4U Warriors) சுனாமி யங்கஸ் அணியும் (Tsunami Youngers) இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் B4U Warriors அணியினர் சம்பியன் அணியாக தெரிவாகி சம்பியன் கிண்த்தையும் நாற்பதாயிரம் ரூபா பண பரிசினையும் பெற்றுக் கொண்டது. இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட சுனாமி யங்கஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 20 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Tsunami Youngers அணியிர் முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம்தெரிவித்து 07 ஓவர் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. வெற்றி இலக்கு 54 என்ற நிலையில் களமிறங்கிய B4U Warriors அணியினர் 4.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 58 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தனர்

இந்த நிகழ்வில் அணிகளின்  அனுசரணையாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், சுற்றுப் போட்டியின் நிருவாக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts