பிராந்தியம் | விளையாட்டு | 2023-05-03 06:26:40

சுமூகமான உறவை ஏற்படுத்தும் நோக்கில் சினேக பூர்வ கிரிகெட் போட்டி

இரு சமூகத்தினர் மத்தியில் பொது மைதானம் அமைப்பதில் காணப்படும் பிணக்கு தொடர்பாக ஒரு மத்தியஸ்தை ஏற்படுத்தி சுமூகமான உறவை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் சேனையூர்  ஸ்ரீகணேசா விளையாட்டு கழகத்துக்கும் சந்தோசபுர ஒலிஔி விளையாட்டு கழகத்துக்கும் இடையில் ஈரோப்பியன் யூனியன்(EUROPEAN UNION),பிரிட்டிஸ் கௌன்சில்
(BRITISH COUNCIL),முஸ்லிம் எய்ட்(MUSLIM AID),ஸ்ரைட்(STRIDE)
ஆகிவற்றின் அனுசரனையுடன்
சினேக பூர்வ கிரிகெட் போட்டி திங்கள் (01) சந்தோசபுர புது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இத்திட்டமானது நாடளாவிய ரீதியில்  வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற ACTIVE CITIZENS செயற்திட்டத்தின் ஒரு வடிவமானதாகும்.

பயன் உறுதிமிக்க வகையில்  பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் SEDR  செயற்திட்டத்தில்
ACTIVE CITIZENS - MUTTUR அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமைக்களம் செயற்பாடானது கட்டைப்பறிச்சான்  சந்தோசபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில்  சேனையூர் ஸ்ரீகணேசா விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியது.

அத்தோடு இங்கு இரு அனியினருக்கும் இடையில் சினேக பூர்வ உரையாடல்களும் இடம்பெற்றதோடு இதனை ஏற்பாடு செய்து சுமூகமான உறவை ஏற்படுத்திய
ACTIVE CITIZENS மூதூர் குழுவுக்கு நன்றிகளையும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இந் நிகழ்வுக்கு விஷேட விருந்தினர்களாக ஸ்ரீகணேசா விளையாட்டு கழக தலைவர்கள் மற்றும் ஒலி ஔி விளையாட்டு கழக தலைவர்கள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் பழங்குடியின அமைப்பின் தலைவர்  பொருலாளர் மற்றும் இந்த செயற்திட்ட குழுவான ACTIVE CITIZENS - MUTTUR குழு உறுப்பினர்களான
ரீ.எம்.ஹுஸாம், ஹரிஷங்கர், ததுர்ஷன்,இம்ரான் நஸீர் ,ஜில்பானா  மற்றும்
எம்.றொஷின்டன் (Muslim Aid  SEDR செயற்திட்ட மாவட்ட ஒருங்கிணைபாளர்)
ஆகியோர் கழந்து கொண்டு  வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்களும் வழங்கி வைத்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts