பிராந்தியம் | கல்வி | 2023-04-27 06:35:20

காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

(எம். எச். எம். அன்வர்)

காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில்  தரம் 1 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் எஸ். ஐ. யஸீர் அறபாத் அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை  (25.04.2023) பாடசாலையில்  இடம்பெற்றது.

இம்முறை தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களாக தெரிவுசெய்யப்பட்ட 82 மாணவர்களை வரவேற்று மலர் மாலை அணிவித்து அவர்கள் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதய சிரீதர் கலந்துகொண்டார். ஏனைய அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி .சில்மியா அவர்களும்  காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எம். கலாவுதீன், காத்தான்குடி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் எம். சி .எம். ஏ. சத்தார் சேர்,  வைத்தியர்களான Dr. அஸ்மி ஹசன் Dr. நபீல், Dr.நதீர், Dr. ஹனீஸ்,  பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன முன்னாள் தலைவர் மௌலவி ஏ. எல். ஆதம் லெவ்வை (பலாஹி) முன்னாள் ஆசிரிய ஆலோசகர் மௌலவி அப்துல் கபூர் (மதனி) ஓய்வுபெற்ற அதிபர் கே. எம். ஏ. அஸீஸ் சேர், முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் எம். ஆதம்லெவ்வை, சட்டத்தரணி எம்.றுஸ்வின், கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி  எம். ஐ. ஜவாஹிர் உட்பட கல்விமான்கள், பாடசாலை நிறைவேற்றுக்குழு செயலாளர் எம் .ஐ .ஜவ்பர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ,பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் பிள்ளை வளர்ப்பில் பிரதான நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான  சிறப்புரையினை ஆசிரியர் எம். சன்ஸீர் BSc. வழங்கினார்.

அத்துடன் அண்மையில் இடம்பெற்ற உற்பத்தித் திறண் போட்டியில் காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயம்  தெரிவுசெய்யப்படமைக்காக அதற்கான ஊக்குவிப்பினையும் ஆலோசனைகளையும் வழங்கிய காத்தான்குடி பிரதேச செயலாளர் உட்பட அக்குழுவினர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கலை நிகழ்வுகள் இந்நிகழ்வுக்கு மேலும் வலுச்சேர்த்ததுடன் சிறப்பான ஏற்பாட்டினை ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வினை சிறப்பான முறையில் நெறிப்படுத்தியிருந்தார் வசந்தம் TV முன்னாள் செய்தி வாசிப்பாளரும் அறிவிப்பாளருமான எம். ஜே .எம். சுக்ரி என்பது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts