பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-04-14 13:57:08

பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தீன்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு!

( றியாஸ் ஆதம்)

ரமழான் மாதத்தினை முன்னிட்டு செக்டோ சிறிலங்கா நிறுவனம் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தீன்மார்களுக்கு  உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளது. 

குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழன் (13) அட்டாளைச்சேனை MPCS கட்டிடத்தில் இடம்பெற்றது.

செக்டோ -  ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம் ஹனீபா கௌரவ அதிதியாகவும், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.அஷ்ரத், ஜெஸ்கா அமைப்பின் திட்ட முகாமையாளர் மௌலவி அஷ்ஷேய்க் அர்ஷத் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அமைப்பின் உப தலைவர் எம்.ஏ.றம்ஸான், தவிசாளர் ஏ.எல்.றியாஸ், கொள்கைபரப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், பொருளாளர் ஏ.எல்.றிம்சான், கணக்காளர் எம்.நிசார், உயர்பீட உறுப்பினர்களான ஏ.எல்.எம்.புஹாரி,  எஸ்.ஜாபிர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த உலர் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிதியுதவிகளை செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளருமான தேசகீர்த்தி ஏ.எம்சம்சுதீன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

உலர் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட பணிகள் எதிர்வரும் ஒரு சில நாட்களில் இடம்பெறவுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts