உள்நாடு | பொருளாதாரம் | 2023-04-13 06:02:51

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 10 மில்லியன் முட்டைகளை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!

இலங்கையில் இருந்து கொள்வனவு கட்டளை கிடைக்கப் பெற்றால் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் இலங்கைக்கு 10 மில்லியன் முட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியும் என இந்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை செயலாளர் ராஜேஸ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்திய முட்டைக்கான சந்தையாக இலங்கையும் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இந்திய முட்டை உற்பத்தியாளர்களுக்கு சாதகமான விடயமாகும் என இந்திய தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

முன்னதாக இந்தியாவின் முக்கிய முட்டை சந்தையாக மலேசியா இருந்தது. ரஷ்ய – யுக்ரைன் யுத்தத்தை அடுத்து கோழி தீவனங்களின் விலை உயர்ந்தமையினால் பல நாடுகள் முட்டைகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவுக்கு விரைகின்றன.

இந்தநிலையில், முட்டை ஏற்றுமதி குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள இந்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை செயலாளர் ராஜேஸ் குமார் சிங், இலங்கைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தேவையான முட்டையை அனுப்புவதற்கு தங்களது தரப்பு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கொள்வனவு கட்டளை கிடைக்கப் பெற்றால் முட்டைகள் அனுப்பப்படும். ஏலவே அனுப்பப்பட்ட முட்டை தொகுதி உரிய பரிசோதனைகளின் பின்னர் அனுப்பப்பட்டதாக இந்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை செயலாளர் ராஜேஸ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts