பிராந்தியம் | விளையாட்டு | 2023-04-10 06:11:01

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் வலையமைப்பில் இணைந்தது நிந்தவூர் சுப்ரீம்!

உலகளாவிய ரீதியில் சமூக சேவையின் முன்னோடிகளான லயன்ஸ் கழகத்தின் இலங்கைக்கான 306 C2 மாவட்டத்தின் கீழ் மிகச்சிறப்பாக இயங்கிவரும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழத்தின் மூலம் புதிய கழக விரிவு படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனை உத்தியோகபூர்வமாக சர்வதேச லயன்ஸ் கழத்தில் உள்வாங்கும் நிகழ்வுகள் லயன்ஸ் கழகத்தின் இலங்கைக்கான மாவட்ட ஜீ.எம்.ரீ ஒருங்கிணைப்பாளரும் புதிய கழக உள்வாங்கல் தவிசாளருமான லயன். சாஹிர் அஹமட் அவர்களின் தலைமையில் நிந்தவூர் தோம்புக்கண்டம் விலேஜ் ரெஸொட் இல் கடந்த 07.04.2023 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் 306 C2 மாவட்டத்தின் கௌரவ ஆளுணர் லயன். பென்னட் கம்லத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்திருந்தார்கள். மேலும் லயன் பெண்கள் அமைப்பின் தலைமை போசகரும் முதல் பெண்மணியுமான திருமதி சரோஜனி கமலத் அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் மாவட்ட அவையின் செயலாளர் லயன். கயா உபசேன அவர்களும் புதிய கழகத்தின் விரிவாக்கல் தலைவர்களில் ஒருவரும் மாவட்ட ஆளுணரின் மாவட்டத்திற்கான விசேட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் லயன். எம்.ஐ.எம். சியாத் மற்றும் புதிய கழகத்தின் விரிவாக்கல் தலைவரகளில் மற்றவரும் மாவட்ட ஆளுணரின் மாவட்டத்திற்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் லயன். எம்.பீ.எம். பௌfஸான் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் பிராந்திய தவிசாளர் லயன். சிசிர அலஹகோன் மற்றும் வலயத்திற்கான தவிசாளர் லயன். எம்.ரீ.ஏ. அனாfப் அவர்களும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன். கலாநிதி சற்.ஏ. பஸீர், செயலாளர் லயன். ஏ.ஜே.எம். ராfபி, பொருளாளர் லயன். எஸ்.எம். நfபீர் ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் செயலாளர் லயன். எம்.எம் நஸீர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன். எஸ். அறூfப் அர்ஷத் அவர்களும் செயலாளராக லயன் எம்.வை. அஸ்லி யூசுfப் மற்றும் பொருளாளராக லயன். ஏ. ரிலா இப்றாஹிம் அவர்களும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர், பிராந்தியத்தில் உள்ள ஏனைய லயன்ஸ் கழக உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர். 

பின்னர் உரையாற்றிய லயன்ஸ் கழக மாவட்ட ஆளுணர் அவர்கள் எமது கழகம் சிறப்பாக இயங்கி பல சமூக சேவைகள் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் ஆளுணர் அவர்கள் லயன்ஸ் கழகம் மூலம் செய்கின்ற சமூக சேவைகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக நிந்தவூரின் கபடி வீரர் அஸ்லம் சஜா அவர்கள் இலங்கை தேசிய கபடி அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் உரையாற்றிய நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன். எஸ். அறூப்f அர்ஷத் ஊரில் உள்ள தேவையுள்ள மக்கள் நலனுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி செயற்படவுள்ளதாக கூறினார். இதன்போது எமது இளம் தலைமுறையினரை  அதிகமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பளிப்பதன் மூலம் போதைப்பொருள் மற்றும் எலக்ரோனிக் சாதனங்களுக்கு அடிமையாவதிலிருந்து அவர்களை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்தார். மேலும் நிந்தவூர் தள வைத்தியசாலைக்கு தேவையான அத்தியவசிய மருந்துகள் ஒரு தொகையினை விரைவில் வழங்கவுள்ளதாகவும் அறிவித்தார். இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டிக்கொண்டார். 
பின்னர் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுகளுடன்  வைபவம் நிறைவடைந்தது. 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts