உள்நாடு | சமூக வாழ்வு | 2023-04-08 05:46:15

விவசாயத் துறை அதிகாரிகளுக்கு நீண்ட கால வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதி இல்லை -அமைச்சர்!

விவசாயத் துறையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நீண்ட கால வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
இது மத்திய அரசின் விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மாகாண சபை விவசாயத் துறை அதிகாரிகளை உள்ளடக்கியது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான நீண்ட கலந்துரையாடல் அமைச்சில் நேற்று நடைபெற்ற மாகாண விவசாய மாநாட்டில் இடம்பெற்றது.
நீண்ட கால வெளிநாட்டுப் பயணங்களுக்கு விவசாய அமைச்சரின் அனுமதி தேவைப்படுவதால், அதற்கான அனுமதியை வழங்க வேண்டாம் என அதிகாரிகள் மாகாண விவசாய அமைச்சரிடம் முன்மொழிந்தனர்.
தற்போது விவசாய பயிற்றுனர்கள், குறிப்பாக விவசாய துறையில் பணிபுரிபவர்கள் போன்ற பல பணியிடங்கள் காலியாக உள்ளன. பல ஆண்டுகளாக அந்த பணியிடங்களை நிரப்ப ஆள்சேர்ப்பு நடத்தப்படவில்லை.
விவசாயத் துறை அதிகாரிகள் நீண்ட காலம் வெளிநாடுகளுக்குச் சென்றால், நம் நாட்டின் விவசாயத் துறை முற்றிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.
எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டு விவசாயத்துறை அதிகாரிகளுக்கு நீண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் வரை இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் என்றும், விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள் நீண்ட கால வெளிநாட்டு பயணங்களுக்கு ம கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் என்றும் அமைச்சு அனைத்து விவசாய அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts