பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-04-08 05:22:50

சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலை காணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படுகின்ற ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பங்களிப்பினை மேம்படுத்தும் முகமாக பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பணிகள் மற்றும் மருந்து விநியோக சேவைகள் சிறந்த முறையில் ஆய்வுகள் உற்பத்திகள் என்று பல நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.


இந்நிலையில் இதன் அங்கமாக சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலைக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்தியசாலையின் இதர சேவைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் தலைமையில் பணிமனையில்(06)இடம்பெற்றது

இதன் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம்.எம்.ஆசிக்,கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.நபீல்,திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர்,சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி எஸ்.எம்.ரிசாத் மற்றும்  பிரதேச செயலக காணி அதிகாரி எம்.ஏ.எம்.ராபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலைக்கு விரைவில் காணியினைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் தற்போது காணப்படும் மத்திய ஆயுர்வேத வைத்தியசாலையினை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையாக எதிர்காலத்தில் 
தரமுயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த சந்திப்பு தொடர்பாக சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம்.ரிசாத் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts