பிராந்தியம் | அபிவிருத்தி | 2023-04-05 05:48:14

மருதமுனை தொடக்கம் பொத்துவில் வரை மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட பாதைகளின் பெயர்களுடனான பலகைகள் பொருத்தும் நடவடிக்கை

(பாறுக் ஷிஹான்)

பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட  பெயர்ப் பலகைகளை பொருத்தும்   நடவடிக்கைகளை கடந்த  3 தினங்களாக  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் எடுத்து வருகின்றது.

இதற்கமைய மருதமுனை ,கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, போன்ற பகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், லகுகல,பகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட  பெயர்ப் பலகைகளை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்கள உயரதிகாரி தெரிவித்தார்.

கடந்த காலங்களில்   சேதமாக்கப்பட்ட வீதிகளுக்கான  பெயர் பலகை  அகற்றப்பட்டும் புதிதாக வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிதாக  உள்வாங்கப்பட்ட வீதிகளுக்கும் இப்புதிய பெயர் பலகைககள் யாவும் கிலோமீற்றர்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன்  பொருத்தபட்டு வருகின்றன.

பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட  பெயர்ப் பலகைகளை பொருத்தும்   நடவடிக்கை ஊடாக வீதி வலையமைப்பை நிலையான முறையில் மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பதன் மூலம் வீதிப் பயனாளர்களுக்கு பாதுகாப்பானதும், நெகிழ்திறன் மற்றும் வசதியானதுமான பயன்பாட்டினை உறுதி செய்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த  வீதிகளின்  பெயர் பலகைகள்  அண்மைக்காலமாக விளம்பரப்பலகையாக சில விஷமிகள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கும் இப்பெயர் பலகைகளில் வியாபார விளம்பரங்கள்  தேர்தல் விளம்பரங்கள்  மரண அறிவித்தல் துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றை ஒட்டி உரு மறைப்பு செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பயணம் செய்பவர்கள் வீதியினை இணங்கான சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.எனவே தற்போது இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு  வீதி பெயர் பலகைகளின்    பாதுகாப்பிற்கான அதன் மேல் இரும்பு வலை பாதுகாப்பு முறையை பொருத்துமாறு பொதுமக்கள் உரிய தரப்பினரிடம்   ஆவண செய்யுமாறு   வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts