பிராந்தியம் | கல்வி | 2023-03-23 22:27:10

காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வு!

(எம். எச். எம். அன்வர்) 

காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இம்முறை இடம்பெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். ஐ. யஸீர் அறபாத் தலைமையில் 21.03.2023 அன்று பாடசாலையில்  இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி ரிப்கா (SLEAS) கலந்து சிறப்பித்தார். 

ஏனைய அதிதிகளாக முன்னாள் மத்திய கல்லூரி அதிபர் எம். சி. எம். ஏ. சத்தார், முன்னாள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஐ. ஆதம்லெவ்வை (பலாஹி), முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புள்ளா அவர்களின் பிரத்தியக செயலாளர் எம். றுஸ்வின் LLB, வைத்தியர்களான Dr. ஏ எல். எம். நபீல் மற்றும் Dr. எம் ஹனீஸ், பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம் அஹ்சாப், பாடசாலை நிறைவேற்றுக்குழு செயலாளர் எம். ஐ. ஜௌபர் மற்றும்  உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்,  கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களான எஸ். எல். ஆரிப் எம். கே. பழீலுர் ரஹ்மான் மற்றும் எம். முனீர்   கலந்து சிறப்பித்தனர். 

இந்நிகழ்வின்போது  சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று மூன்று இடங்களைப்பெற்ற  மாணவர்களுக்கு  நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

நிகழ்ச்சித் தொகுப்பை முன்னாள் வசந்தம் TV செய்தி வாசிப்பாளர்  எம் .ஜே. எம். சுக்ரி சிறப்பாக நடாத்தியிருந்தார்.

இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்களை கல்வியின்பால்  மேலும் உற்சாகப்படுத்தும் என இந்நிகழ்வின்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts