![]() |
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை மஸ்ஜித்துல் மக்பூலியா ஜும்மா பள்ளிவாசலில் இயங்கும் ஹிபுல் மதரஸா மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகளை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு (19) நடைபெற்றது.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல், மாணவர்களின் கல்விக்கு கைகொடுத்தல் என பல சமூக நல வேலைத்திட்டங்களை பைத்துல் ஹெல்ப் அமைப்பு இந்தக் குர்ஆன் பிரதிகளை இலவசமாக வழங்கினர்
இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் பிரதானி ரைஸுல் ஹக்கீம் குர்ஆன் மதரஸா மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். இந்நிகழ்வில் மருதமுனை மஸ்ஜித்துல் மக்பூலியா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் உட்பட நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.