பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-03-18 06:28:18

கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (16) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், பிரதி முதல்வர் ரகுமத் மன்சூர்,கணக்காளர் யூ.எல் ஜவாஹீர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கல்முனை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லை பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும்.தீர்வுகளும், மருதமுனை சுனாமி வீடுகள் பகிர்ந்தளிப்பு போன்ற பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு  முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts