![]() |
நலன்புரி நன்மைகளுக்காக பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
334 பிரதேச செயலகங்களிலிருந்து கிடைக்கபெற்ற 37 இலட்சம் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களின் தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் தகவல் கணக்கெடுப்பு நிநைவடைகின்றது, அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.