பிராந்தியம் | கல்வி | 2023-03-02 06:19:25

ஸஹிரியன்ஸ் 90 பழைய மாணவர்கள் அமைப்பினால் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி மேன்பாட்டு உதவி !

நூருல் ஹுதா உமர்)

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பான ஸஹிரியன்ஸ் 90 பழைய மாணவர்கள் அமைப்பின் உதவியினால் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி மேன்பாட்டு செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஸஹிரியன்ஸ் 90 பழைய மாணவர்களின் அனுசரனையில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தற்போதய அரச நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெறுமதிவாய்ந்த போட்டோ பிரதி தாள்கள் (A4 size 80 GSM) ஒரு தொகுதியையும், தேசிய கல்வி நிறுவன ஆங்கில மொழிமூல உயர்தர விஞ்ஞான வகுப்பிற்குரிய பௌதீகவியல், இரசாயனையியல்,  உயிரியல் பாடங்களுக்கான ஆசிரியர் கையேடுகளும் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.எம். ஜாபீர் அவர்களிடம் ஸஹிரியன்ஸ் 90 பழைய மாணவர் அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவரும், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க உப தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.வை. அன்வர் ஸியாத் தலைமையில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் டாக்டர் முஹம்மட் ஜிப்ரி, அமைப்பின் முன்னாள் தலைவரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்க முன்னாள் செயலாளருமான டாக்டர் சனூஸ் காரியப்பர், முன்னாள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அமீன் றிசாத், உப செயலாளர் எம்.எம். அப்துல்  ரஹீம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts