பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-02-27 14:40:00

ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார் !

( நூருல் ஹுதா உமர் )

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக, உதவி முகாமையாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ எல்.யூ. ஜூனைதாவின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில் இன்று (27) சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஸ்தாபக பிரதேச செயலாளருமான ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, கணக்காளர் நுஸ்ரத் பானு, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் பிரதேச செயலகங்களின் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், சமூர்த்தி வங்கி  உத்தியோகத்தர்கள், சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இவர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 1996.03.04 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று சாய்ந்தமருது - 14 ஆம் பிரிவில் 3 வருடங்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றினார். பின்னர் சாய்ந்தமருது உப பிரதேச செயலகம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதனால் அதில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி  வங்கிச் சேவை 2001 ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட போது அதில் ஸ்தாபக உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு சுமார்16 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அவரது காலப்பகுதியில் சமுர்த்தி வங்கி பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. பின்னர் சாய்ந்தமருது சமுர்த்தி வலயத்தின் உதவி முகாமையாளராக 5 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றியுள்ள இவர் அதனை தொடர்ந்து சாய்ந்தமருது சமுர்த்தி மகாசங்கத்தின் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடமையாற்றிய நிலையில், தனது பட்டப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம் இன்று சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார். இவர் சிலோன் மீடியா போரம் ஊடக அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts