பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-02-07 21:59:39

மருதமுனைபாத்திமா சீபா இப்றாஹீம் எழுதிய 'இஸ்லாமி உளவளத்துணையும் கிழக்கிலங்கையும்' நூல் வெளியீட்டு விழா

(கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை பாத்திமா  சீபா இப்றாஹீம் எழுதிய ​​'இஸ்லாமிய உளவளத்துணையும் கிழக்கிலங்கையும்'  நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(05-02-2023)மாலை  மருதமுனை பொது நூலக மண்டபத்தில் கல்முனை மாநகர ​​சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.நெய்னா முகம்மட் தலைமையில் நடைபெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம  அதிதியாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம், கலந்து சிறப்பித்தார்.அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி மஸ்றூபா முஹம்மது மஜீட், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஜெசீலா உதுமாலெப்பை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் எச்.எஸ்.எம்.ஹம்யான் கிராஅத் ஓதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஏ.எல்.எம்.சிஜாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.எ.ஏ.நஹீஜ் அஹமட் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி மஸ்றூபா முகம்மது மஜீட் நூல் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். பிரதம  அதிதி எம்.எப். ஹிபத்துல்கரீம், அதிதி வை.ஹபிபுல்லாஹ்,ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இங்கு நூலின் முதல் பிரதியை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.நெய்னா முகம்மட், தந்தை ஏ.எம்.இப்றாகீம்,  தாயார் ஆசிரியை ஏ.ஆர் ஹாஜறா ஆகியோர் நூலாசிரியர்  பாத்திமா  சீபாவிடமிருந்து நூலைப்  பெற்றுக்கொண்டனர்.  பிரதம அதிதி மற்றும் அதிதிகளுக்கு நூலாசிரியர்  பாத்திமா  சீபா இப்றாஹீம் நூலை வழங்கி வைத்தார். நூலாசிரியரின் உரையுடன் அஷ்ஷெய்க் எ.எச்.எம்.பர்ஸான் நன்றியுரையாற்ற ஏ.ஏ.நஹீஜ் அஹமட் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts