பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-02-06 15:13:18

கல்முனை மாநகர சபையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் ஏ.எம்.அக்பர்; ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அனுதாபம்


(சாய்ந்தமருது நிருபர்)

கல்முனை மாநகர சபையின் வேலைப்பகுதி ஊழியராக கடமையாற்றிய ஏ.எம். அக்பரின் இழப்பு  கல்முனை மாநகர சபைக்கும், மாநகர மக்களுக்கும், பாரிய துயர்மிக்க பேரிழப்பாகும் என கல்முனை மாநகர ஆனையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.

அவரது மறைவையொட்டி மாநகர ஆனையாளர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் கல்முனை மாநகர சபையில் வேலைப் பகுதி ஊழியராக இனைந்து கொண்ட ஏ.எம்.அக்பர் கல்முனை மாநகர சபையினதும், கல்முனை மாநகர மக்களினதும், அர்பணிப்புமிக்க சேவகனாக பணியாற்றியுள்ளார். அவரது பணி தொடர்பில்  அவர் ஆற்றிய திருப்தியான சேவை என்றும் நினைவில் நிறுத்திப் பார்க்க வேண்டிய ஒரு உள்ளூராட்சி மன்ற ஊழியராக அவரை நிலைநிறுத்தியுள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட கடமையினை வினைத்திறனுடனும், அர்பணிப்புடனும் செய்து முடிப்பதற்கு தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்துக் கொண்டவராக கானப்பட்ட அவர் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்காக குரல் கொடுக்கும் ஒருவராகவும், நீதியாகவும், நியாயமாகவும், சேவையாற்றும் அதிகாரிகளின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார்.

அவரது இழப்பு கல்முனை மாநகர சபைக்கும், கல்முனை மாநகர மக்களுக்கும், பாரிய இழப்பும் ஆழ்ந்த வேதனைக்குரியதுமாகும்.

அவரது இழப்பினால் துயருற்றுள்ள அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்மற்றும் நண்பர்கள், அவருடன் ஒட்டி உறாவாடி வந்த அனைவருக்கும் எனதும், கல்முனை மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர், உறுப்பினர்கள், உதவி ஆனையாளர், பொறியியளாளர், கணக்காளர் மற்றும் பதவி நிலை உத்தியோகர்த்தகர்கள், உத்தியோகர்த்தர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஊழியர்கள் அனைவரினதும் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும் பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்- எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts