![]() |
மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் இணைந்து நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு `கறுப்பு ஜனவரி` அனுஷ்டிக்கப்படவுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிட்டாத பின்னணியில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்விமான்களுடன் இணைந்து வருடாந்தம் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யும் 'கறுப்பு ஜனவரி நிகழ்வு' மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.
'ஊடகத் தொழிற்துறையினரைப் பாதுகாக்க ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம்' என்ற தொனிப்பொருளில் 'கறுப்பு ஜனவரி நிகழ்வு' இவ்வருடம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், தாங்களும் தங்களது நண்பர்கள், உறவினர்களும் கலந்து கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்து உரிமை, கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கும் இந்நிகழ்வில் பங்குபற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்.
மட்டக்களப்பு