![]() |
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் புதன்கிழமை(25-01-2023)இரவு வெளியாகின இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் மருதமுனையில் ஏழு பாடசாலைகளில் இருந்து 349 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 117 மாணவர்கள் தோற்றி 27 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.அல்-ஹம்றா வித்தியாலயத்தில் 53 மாணவர்கள் தோற்றி 20 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அல்.-ஹிக்மா ஜுனியர் பாடசாலையில் 64 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அல்-மதீனா வித்தியாலயத்தில் 52 மாணவர்கள் தோற்றி 8 மாணவர்கள் சித்தியடைந்தள்ளனர்.அல்-மினன் வித்தியாலயத்தில் 21 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
பெரியநீலாவணைஅக்பர் வித்தியாலயத்தில் 14 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் தோற்றி 1 மாணவர் சித்தியடைந்துள்ளார்.
சித்தியடைந்த 75 மாணவர்களில் அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவி முகம்மட் நிஹால் மரியம் 179 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும், அல்-ஹம்றா வித்தியாலய மாணவி முகம்மட் றியாஸ் ஐலா 177 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவி நஸ்மி மரியம் 171 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.