கல்வி | கல்வி | 2023-01-20 01:42:59

பெரியநீலாவணை புலவர்மணியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை திறந்துவைப்பு

(ஏ.எல்.எம். ஷினாஸ்)

கல்முனை வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைக்கும் நிகழ்வு  பாடசாலையின் பிரதி அதிபர் எம்.சி.நஸார் ஒருங்கிணைப்போடு அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில் (16) நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுமார் 1.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களின் நவீன கற்றலுக்கு தேவையான 'ஸ்மார்ட் போர்ட் ' உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு தேவையான நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறையும் இதன் போது  திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மருதமுனை ஹேன்லூம் சிட்டி (Handloom City) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் மஸ்ஜிதுல் மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எல்.எம். ஜெமீல், கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் வி.எம்.ஸம்ஸம், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் சம்மாந்துறை ஹுதா சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.எம் முஜீப் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர். 

இதில்பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts