கல்வி | கல்வி | 2022-02-11 23:34:49

தென்கிழக்குப் பல்கலைக்கழக 14 ஆவது பட்டமளிப்பு விழாவின் இறுதி நாள்

நூருல் ஹுதா உமர், சலீம் றமீஸ்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் 2022.02.10 ஆம் திகதி இடம்பெற்றது. மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல் இரு அமர்வுகள் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ் சபீனா எம்.ஜி.ஹஸன் தலைமையில் இடம்பெற்றது.

உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டலின் கீழ் விவசாய ஆராய்ச்சிக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க இறுதி நாள் நிகழ்வுக்கான பிரதான உரையை நிகழ்த்தினார். இங்கு முதல் நிகழ்வாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஜௌபர் சாதிக் அவர்களுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 625 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் 23 பேர் வியாபார நிருவாக முதுமானிப்பட்டங்களையும், 2 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவுக்கான பட்டங்களையும் எம் ஐ. பாத்திமா பஷீலா 2013/2014 ஆம் ஆண்டுக்கான் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் இப்றாலைப்பே ஞாபகார்த்த விருதினையும் ஏ.என்.பாத்திமா சைனப் குறித்த ஆண்டின் வர்த்தக பிரிவின் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் இஸ்மாயில் ஞாபகார்த்த விருதினையும் பெற்றுக்கொண்டதுடன் ஆர்.பாத்திமா றாஜி 2014/2015 ஆம் ஆண்டுக்கான் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் இப்றாலைப்பே ஞாபகார்த்த விருதினையும் டப்ளியு.ரீ. டிலானி வீரசிங்க 2014/2015 ஆம் ஆண்டுக்கான் வர்த்தக பிரிவின் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் இஸ்மாயில் ஞாபகார்த்தபெற்றுக்கொண்டனர்.

இதே தினத்தில் இடமெற்ற இறுதி அமர்வு கலை கலாச்சார பீடத்தில் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும்  முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ் சபீனா எம்.ஜி.ஹஸன் ஆகியோரது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த இரு பீடங்களிலும் கல்விகற்ற 312 வெளிவாரி மாணவர்கள் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

14வது பட்டமளிப்பு விழாவில்; வெளிவாரி கற்கைப் பிரிவில் கல்வி கற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்  ஏ.ஆர். ஜிப்Fரியா நௌபர், ஜே.எம். இன்பாஸ், ஏ.எம். நிகாப், எஸ்.எல்.ஏ. அஹத் ஆகியோரும் பட்டங்கைப் பெற்றுக்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நேற்று 10 ஆம் திகதியுடன் நிறைவுபெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழாவில்; பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்களுடன் இணைந்து, 2621 மாணவர்கள் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களின் கரங்களால் பட்டங்களை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.