உள்நாடு | சமூக வாழ்வு | 2022-02-11 23:21:07

யூ.எஸ்.எப்.ஸ்ரீலங்காவின் வருடாந்த கூட்டமும், சான்றிதல் வழங்குதல் நிகழ்வும்.

நூருல் ஹுதா உமர்

யூ.எஸ்.எப்.ஸ்ரீலங்காவின் வருடாந்த கூட்டம் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான கபூர் ஏ அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (10) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.அஹமட் சபீர், இளைஞர் சேவை அதிகாரியும் சாய்ந்தமருது  இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான எம்.டீ.எம். ஹாறுன் உட்பட அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

அமைப்பின் ஸ்தாபக தலைவர் கபூர் ஏ அன்வர் இனால் அமைப்பின் கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விளக்கப்பட்டதுடன்  அமைப்பின் தேசிய அமைப்பாளர் சிப்னாஸ் அஸீஸ் இனால் யாப்பு திருத்தம் இந்த வருடத்திற்கான செயற்பாட்டு திட்டமும் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கமு/ லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் அமைப்பினால் கொண்டாப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு  சிரமதானப் பணி,  மரநடுகை  மற்றும் செயற்பட்டாளர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட அமைப்பின் செயற்பாட்டாளருக்கு சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டது.