![]() |
(எம்.என்.எம்.அப்றாஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ் )
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான பரிசோதனை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இன்று (11)இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்நாயக்க கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டதுடன், பொலிஸாரால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை நிலையங்கள்,
சுற்றுச்சூழல் போன்றவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.