உள்நாடு | சமூக வாழ்வு | 2022-02-04 15:50:03

மீஸானின் ஏற்பாட்டில்  74வது சுதந்திர தின நிகழ்வு மாளிகைக்காடு சபீனாவில் !

எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தேசிய தவிசாளரும், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளருமான தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் நூருல் ஹுதா உமரின் தலைமையில் கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று (04) நடைபெற்றது.

தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்த இராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மௌன பிராத்தனை இடம்பெற்றதுடன் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பிரதித்தவிசாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஒருங்கிணைப்பாளர் பீ.முஹம்மட் நாசிக் இந் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன பொருளாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான, அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதான செயற்பாட்டாளர் எஸ்.எம். சபீஸ் கலந்து கொண்டதுடன் மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி, காரைதீவு பிரதேச சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயம் செயற்பாட்டாளருமான ஏ.ஆர்.எம். பஸ்மீர், கல்முனை கல்விவலய உதவிக்கல்வி பணிப்பாளர் சஞ்சீவன், கிராம நிலத்தாரி ஏ.எம். நஜீம், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். ஜெமீல், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆர். ஜௌஸான், ஸ்ரீலங்கா நிர்வாக பிரிவின் பிரதம உதவிச்செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி.எம். நிஸார், கலைப்பிரிவு தலைவர் பல்துறை கலைஞர் என்.எம்.அலிக்கான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts