உள்நாடு | இலக்கியம் | 2022-02-02 07:20:06

அக்கரைப்பற்றில் நடந்தேறிய புகைப்படக் கலைஞர்களுக்கான விருது வழங்கல் விழா

(சியாத்.எம்.இஸ்மாயில்)

அக்கரைப்பற்றில் புகைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கல் விழா Club Photo Ceylonic வின்  தலைவரும் வைத்தியருமான ஆகில் அஹ்மட் ஷரிபுதீன் மற்றும் புகைப்படக் கலைஞரும் விழா ஏற்பாட்டாளருமான அப்துல் ஹமீட் தாஹிர் ஆகியோரின் தலைமையில்  அக்கரைப்பற்று மாநகர சபையின்  ஹல்லாஜ் மண்டபத்தில் கடந்த சனி, ஞாயிறு   தினங்களில்  நடைபெற்றது.

Club Photo Ceylonica வின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரபல புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் மற்றும் 2020, 2021 ஆண்டுகளில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற  புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தபபட்டதுடன் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான விருது வழங்கல் விழாவும் நடைபெற்றது.

சனிக்கிழமை (29)  நடைபெற்ற புகைப்படத்திரு விழா நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாஉல்லா அகமட் சகி  பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சர்வதேச விருது வெற்றியாளர் ஹர்ஷ மதுரங்க ஜெயசேகர, அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மேம்பாட்டு கலாசார உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான், மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஏ.தீன் முகம்மட், போட்டோஹப்பின் தலைமை பிரவீன், சமரக்கோன், எழுத்தாளர் உமாவரதராஜன், பட தாயாரிப்பாளரும் எமுத்தாளருமான ஹசீன் ஆதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற விருது வழங்கும் விழா நிகழ்வில்,  பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநீதன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், FNPIAS சர்வதேச விருது வெற்றியாளர் ஹர்ஷ மதுரங்க ஜெயசேகர,  போட்டோஹப்பின் தலைமை பிரவீன் சமரக்கோன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இறுதி நாள் போட்டி  நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான  விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதில் Grant Award  விருது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்ட கல்லூரி மாணவன் எம்.எஸ். அதீப் அஹமட் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன, Club Photo Ceylonica வின் அங்கீகார விருது வத்தளை அமலினி டி செய்றாஹுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts