ஆரோக்கியம் | மருத்துவம் | 2022-02-02 06:55:13

மனித நேயத்திற்கு  மரியாதை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நிகழ்வு 

(நூருள் ஹுதா உமர்)

"ஐக்கியமாக, ஒரே மனதுடன், வலுவாக எனும் தொனிப்பொருளில் பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஒரு அங்கமாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், உதவி கல்வி பணிப்பாளர் வி.டீ. சகாதேவராஜா, கண்ணகி அம்மன் ஆலய பிரதம குருக்கள், உலமாக்கள் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்த பல துறைகளை சார்ந்தோருக்கும் பாராட்டு வழங்கப்பட்டது.


Related Posts