உள்நாடு | கல்வி | 2022-02-01 23:40:49

பொலித்தீன் பாவனை  அற்ற பாடசாலையாக கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர்கள் உறுதியுரை ..!

(எம். என். எம். அப்ராஸ்)

சுற்றுப்புற சூழலை சுத்தமாகவும், நிலைபேறானதகவும் மாற்றும்  வகையில் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ .எச். அலி அக்பர் தலைமையில் "சுத்தமான புறச் சூழல்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையில் அதிகமாக வெளியேற்றப்படும் கடதாசி கழிவுகள் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் விதமாகவும்,  இதனை குறைக்கும் முகமாகவும்  அதற்கான வழிமுறைகள், ஒழுங்குகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் பாடசாலை சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வொன்று இன்று திங்கட்கிழமை(31) பாடசாலையில் இடம்பெற்றிருந்தது.

காலை ஆராதனையில் பொலித்தீன் பாவனையற்ற,

கடதாசி கழிவுகள் அற்ற  பாடசாலையாக  மாணவர்களுக்கு  எடுத்துக் கூறப்பட்டு, விழிப்புணர்வு பதாகைகள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்ததுடன் இதன் போது மாணவர்களின்  உறுதியுரையும் இடம்பெற்றது

இம் முன் மாதிரியான  செயற்பாடு மூலம் பாடசாலை சுற்றுச் சூழல் சுத்தமடைவதுடன் ஒரு வழிகாட்டலாகவும்   அமையும் என்பதில்  மாற்றுக் கருத்தில்லை மேலும் "பசுமையான சுற்றுப் புறச்சூழல்" உருவாக வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது .

இதேவேளை குறித்த பாடசாலையில் டெங்கு நுளம்பு பரவலை சுற்று சூழலில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் மாபெரும் டெங்கு ஒழிப்பு  விழிப்புணர்வு கடந்த வருடம் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts