உள்நாடு | சமூக வாழ்வு | 2022-01-31 11:13:55

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக எம்.றம்ஸீன் பக்கீர்  கடமையை பொறுப்பேற்றார்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக எம்.றம்ஸீன் பக்கீர்  (28.01.2022) பொலிஸ் நிலையத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1989ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்ட இவர் 33 வருடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்ற இவர் 2019 ஆம் ஆண்டு முதல் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்று சேவையாற்றி வருகின்றார்.

இதற்கு முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் போது திருகோணமலை மாவட்டத்திற்கான விசேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியாக 12 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், மனித உரிமைகள் தொடர்பான கற்கையை பூர்த்தி செய்துள்ளதுடன் துறை சார்ந்த டிப்ளோமா பட்டங்களையும் பெற்றுள்ளார். மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.சம்சுத்தீன், கல்முனை பொலிஸ் நிலைய சமூக பாதுகாப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் உட்பட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், புதிய நிலையப் பொறுப்பதிகாரியின் குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டதுடன்  சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டு ஆசியுரைகளையும் வழங்கினார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts