உள்நாடு | சமூக வாழ்வு | 2022-01-30 11:14:03

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க பொதுக்கூட்டம் : மறைந்த சட்டத்தரணிகளுக்கு இரங்கல் நிகழ்வும் நடந்தேறியது ! 

நூருல் ஹுதா உமர் 

சம்மாந்துறை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் பொத்துவில் தனியார் விடுதியில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல் தலைமையில் கடந்த சனிக்கிழமை (29) நடைபெற்றது. 

இந்த பொதுகூட்டத்தின் போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. அதனடிப்படையில் மீண்டும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி யூசுப் அன்வர் சியாட் சபையோரினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா உம் பொருளாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல் உம் தெரிவுசெய்யப்பட்டனர். 

இதன்போது பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அண்மையில் காலம் சென்ற பிரபல சட்டத்தரணிகளான சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன், சிரேஷ்ட சட்டத்தரணி முஹம்மட் லத்திப்  மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே. பேரின்பராஜா ஆகிய மூவரின் நினைவாக மௌன அஞ்சலியும், நினைவுரைகளும் நடைபெற்றது. 

இங்கு உரையாற்றிய சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா; அரைநூற்றாண்டுகள் மிகபேணுதலான சட்டத்தரணியாக மிளிர்ந்து அண்மையில் மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் அவர்களை சட்டத்துறையில் ஒரு மேதையாக தன்னை திறமைகளை கொண்டு அடையாளப்படுத்தியவராக காண்கிறேன் என்றும் அண்மையில் அமர்த்துவமடைந்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே. பேரின்பராஜா அவர்கள் மனிதநேயம் மிக்க சட்டத்தரணியாக இருந்து எல்லோருடனும் அன்பாக பழகிய மக்களின் அபிமானம் பெற்ற ஒருவர். இவரின் இழப்பு தமிழ் பேசும் மக்களின் இழப்பாகவே உள்ளது. மட்டுமின்றி மறைந்த அக்கறைப்பற்றை சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி முஹம்மட் லத்திப் அவர்கள் மென்மையான போக்கை கொண்ட ஒருவராக இருந்ததுடன் நல்ல பல குணாம்சங்களை கொண்டவராக இருந்தார். இப்படியானவர்களின் இழப்புக்கள் பெரியளவிலான இடைவெளியை உண்டாக்கியுள்ளது என  தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts