உள்நாடு | பொருளாதாரம் | 2022-01-27 18:06:38

இறக்காமம் பிரதேசத்தில் கமசமக பிலிசந்தர வேலைத்திட்டம் ஆரம்பம்

நூருள் ஹுதா உமர்.

அதிமேதகு ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தினை அரச உத்தியோகத்தர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆரம்பக் கூட்டம் இறக்காமல் பிரதேச செயலாளர் எம்.சி.எம். ரஷ்ஷான் தலைமையில் 24 ஆம் திகதி திங்கள் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த செயற்திட்டம்  தொடர்பான அறிமுகத்தை பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் வழங்கிவைத்தார்.

மேலும் இக்கூட்டத்திற்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஷீல், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகர் ஏ.எல்.சன்ஷீர், ஐ.எல். றிபாய் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய வெளிக்கள உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர்.