உள்நாடு | மருத்துவம் | 2022-01-27 16:53:13

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் !

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் றிபாஸ் செவ்வாய்க்கிழமை (24) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வைத்தியசாலை குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

கல்முனை பிராந்திய பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பி அப்துல் வாஜித்,  திட்டமிடல்  வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி மாஹிர் ஆகியோர் சகிதம் மேற்கொண்ட இந்த விஜயத்தின் போது வைத்தியசாலையின் நிலைகளை ஆராய்ந்ததுடன் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே சனூஸ் தலைமையில் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை எதிர்காலத்தில் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை நிலையம் நிலையமாக மாற்றி அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்த பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின்போது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதி ஓய்வு பெற்ற அதிபர் ஐ எல் ஏ மஜீத் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.